Vox Pop

நிஜ வாழ்க்கையை விட Social Media முக்கியமாகிவிட்டதா? லைக்குக்காக வாழ்கிறோமா?...

சமூக வலைதளங்களில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

சமூக வலைதளங்களில் நல்ல விஷயங்களும் உள்ளன, கெட்ட விஷயங்களும் உள்ளன. அதை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் நன்மை தீமை அடங்கியுள்ளது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அபரிமிதமாக அதிகரித்துள்ளது. நிஜ வாழ்க்கையை விட சமூக வலைதளங்கள் முக்கியமாகிவிட்டதா? மக்கள் லைக்குகளுக்காகவும், பிறரின் கவனத்திற்காகவும் வாழ்கிறார்களா? என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதில் பேசிய பலரும், தற்போதைய தலைமுறையினர் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி, நேரத்தை அதிக அளவில் செலவிடுவதால் தங்களது உற்பத்தித்திறனையும், சுயத்தையும் இழந்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரவும் கட்டுக்கதைகளாலும், போலித் தகவல்களாலும் பலரது வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தவறான தாக்கங்களுக்கு உள்ளாகி குற்றச் செயல்களில் ஈடுபடும் சூழலும் உருவாகிறது என ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதே சமயம், சமூக வலைதளங்களால் பல நன்மைகளும் இருப்பதாக மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வீட்டிலிருந்தபடியே உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ளவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், வியாபாரிகள் தங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்தவும் இது பெரிதும் உதவுகிறது.

ஆகவே, சமூக வலைதளங்களில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு சரியான முறையில் பயன்படுத்தினால் அது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதைப் பொதுமக்கள் ஒருமனதாக வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மாலைமலர் சார்பில் எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பை விரிவாகப் பார்ப்போம்.

SCROLL FOR NEXT