இன்றைய சூழலில் கல்லூரிப் பட்டப்படிப்பு அல்லது இரட்டைப் பட்டங்கள் பெற்றிருந்தாலும்கூட, படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைப்பது பெரும் சவாலாக இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எம்.பி.ஏ மற்றும் பொறியியல் படித்த இளைஞர்கள்கூட எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். கடும் போட்டி மற்றும் குறைவான வேலைவாய்ப்புகள் காரணமாக, பட்டதாரிகள் குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளுக்குச் செல்வதும், வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுவது, பைக் டாக்ஸி மற்றும் கூலி வேலைகளைச் செய்வதும் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
படித்த துறைக்கும், தற்போது பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாத சூழலே பெரும்பாலும் நிலவுகிறது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் நிதித்துறையிலும், பி.காம் படித்தவர்கள் தொழிற்சாலைகளிலும், மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் வங்கிகளிலும் பணியாற்றுவதைப் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். "படித்த படிப்புக்குத்தான் வேலை வேண்டும்" என்று காத்திருக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு முன்னேறுவதே இன்றைய காலக்கட்டத்திற்கு அவசியமாகிறது. இதுகுறித்து மாலைமலர் சார்பில் எடுக்கப்பட்ட செய்தித்தொகுப்பில் பொதுமக்களின் கருத்துகளை கீழே உள்ள காணெலியில் விரிவாகக் காணலாம்.