இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையேயான தலைமுறை இடைவெளி (Generation Gap) அதிகரித்து வருகிறது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி, மாறிவரும் வாழ்க்கை முறை, சமூக வலைத்தளங்களின் தாக்கம் மற்றும் சிந்தனை மாற்றங்கள் முக்கிய காரணங்களாக உள்ளன.
பெற்றோர் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு வழிகாட்ட நினைக்கிறார்கள். ஆனால், பிள்ளைகளோ தங்களுக்கான சுதந்திரத்தையும் தனிப்பட்ட விருப்பங்களையும் எதிர்பார்க்கிறார்கள். இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் புரிதல் குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
அந்த வகையில், சமீப காலங்களில் Generation Gap அதிகரிக்கிறதா? பெற்றோர் – பிள்ளைகள் இடையே ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடு? என்ற கேள்வியை சென்னை எழும்பூர் பகுதி மக்களிடம் மாலைமலர் சார்பில் முன்வைத்தோம். அதற்கு பதிலளித்தவர்களில் 80 சதவீதம் பேர் Generation Gap அதிகரிப்பதாகவும், 20 சதவீதம் பேர் அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதே கேள்வியை மாலைமலர் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கேட்கப்பட்டதில், சுமார் 89 சதவீதம் பேர் Generation Gap அதிகரிப்பதாகவும், 7 சதவீதம் பேர் அதிகரிக்கவில்லை என்றும் 4 சதவீதம் பேர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.
மாலைமலர் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் இந்த கேள்விக்கு பதிலளித்தவர்ளில் 80 சதவீதம் பேர் Generation Gap அதிகரிப்பதாகவும், 20 சதவீதம் பேர் அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மாலைமலர் எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்த அனைவரும் அதாவது 100 சதவீதம் பேரும் Generation Gap அதிகரிப்பதாகவே தெரிவித்தனர்.