Vox Pop

தீபாவளி கொண்டாட்டம் எங்கே - சென்னையிலா, சொந்த ஊரிலா? மக்கள் கருத்து

பயண நெரிசலையும் தாண்டி சொந்த ஊர் செல்லத் துடிக்கும் மனங்களுக்கு ஈடாகுமா நகரத்து கொண்டாட்டம்?

தீபாவளி என்றாலே பட்டாசு சத்தம், புத்தாடைகள், இனிப்புகள், குடும்பத்தின் அன்பு என மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

ஆனால், சென்னையில் தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கேள்வி எழும் – தீபாவளியை சென்னையிலேயே கொண்டாடுவதா அல்லது சொந்த ஊருக்கு செல்வதா? சென்னையில் நண்பர்களுடன் கொண்டாடும் தீபாவளிக்கு ஒரு தனி உற்சாகம் இருக்கிறது.

அதே நேரத்தில், சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஒன்றாக கூடி, அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, பலகாரங்கள் சாப்பிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடும் மகிழ்ச்சியே தனி! பயண நெரிசலையும் தாண்டி சொந்த ஊர் செல்லத் துடிக்கும் மனங்களுக்கு ஈடாகுமா நகரத்து கொண்டாட்டம்?

மக்கள் கருத்து:

உங்களின் தீபாவளி கொண்டாட்டம் எங்கே என மாலைமலர் சார்பில் பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது? இதற்கு பதிலளித்தவர்களில் 75 சதவீதம் பேர் சென்னையிலும், 25 சதவீதம் பேர் சொந்த ஊரில் கொண்டாடப் போவதாக பதிலளித்தனர்.

இதேபோல் மாலைமலர் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு 58 சதவீதம் பேர் சொந்த ஊரிலும், 29 சதவீதம் பேர் சென்னையிலும் கொண்டாட இருப்பதாக தெரிவித்தனர். 13 சதவீதம் பேர் கருத்தில்லை என்று பதிலளித்தனர். மாலைமலர் இன்ஸ்டா பக்கத்தில் பதிலளித்தவர்களில் 60 சதவீதம் பேர் சொந்த ஊரிலும், 40 சதவீதம் பேர் சென்னையிலும் தீபாவளி கொண்டாடப் போவதாக தெரிவித்தனர்.

மாலைமலர் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிலளித்தவர்களில் 70 சதவீதம் பேர் சென்னையிலும், 15 சதவீதம் பேர் சொந்த ஊரிலும், 15 சதவீதம் பேர் கருத்தில்லை என்றும் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT