Vox Pop

Files-ஐ திறந்த முதலமைச்சர் விஜய்? அன்பில் மகேஷ் கைதுடன் நிற்குமா? தொடருமா? மக்கள் கருத்து

நிதித்துறை ஆய்வு தொடர்பாக மூன்று முக்கிய விவரங்கள் ஆதாரங்களுடன் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

தமிழ்நாட்டில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதவிர முந்தைய ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டில் மேலும், பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தன் மேசையில் நிதித்துறை ஆய்வு தொடர்பாக மூன்று முக்கிய விவரங்கள் ஆதாரங்களுடன் இருப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும், இவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

மக்கள் கருத்து:

இதனிடையே ஊழல் குற்றச்சாட்டில் தற்போது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து முந்தைய ஆட்சியில் ஊழல் குறித்த ஃபைல்ஸ் தொடர்பான கைது நடவடிக்கைகள் தொடருமா, நின்றுவிடுமா என்று மாலைமலர் சார்பில் சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதற்கு கைதுகள் தொடரும் என்று 11 பேரும், கருத்து இல்லை என 2 பேரும் தெரிவித்தனர். மேலும், இது குறித்து மக்கள் தெரிவித்த கருத்துக்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்..,

SCROLL FOR NEXT