Vox Pop

இன்றைய தலைமுறையினரிடம் பொறுமை குறைந்துவிட்டதா?- மக்கள் கருத்து என்ன?

எதற்கெடுத்தாலும் அவசரம், சின்ன விஷயத்திற்கும் கோபம்... இது இளைஞர்களின் தவறா?

அம்மா ஒரு வார்த்தை சொல்லி முடிப்பதற்குள், “சீக்கிரம் சொல்லும்மா” என்கிறோம். அப்பா அட்வைஸ் செய்ய ஆரம்பித்தால், உடனே “அதெல்லாம் தெரியும் பா” என்று இடையில் நிறுத்துகிறோம்.

ஒரு காலத்தில் அம்மா கையால் சமைத்த சாப்பாட்டிற்காக மணிக்கணக்கில் காத்திருந்த நாம், இன்று 10 நிமிடம் டெலிவரி தாமதமானால் கூட கோபத்தில் டெலிவரி செய்யும் நபரை விளாசிவிடுகிறோம்.

யாரோ ஒருவர் நம்மை கொஞ்சம் புண்படுத்திவிட்டால் போதும், உடனே உறவை முறித்துக்கொள்ள தயாராகிவிடுகிறோம். அல்லது பழிவாங்க துடிக்கிறோம்.

இன்றைய தலைமுறையினரிடம் பொறுமை உண்மையிலேயே குறைந்துவிட்டதா? இல்லை, காலம் தான் அவர்களை அவசரப்படுத்துகிறதா? எதற்கெடுத்தாலும் அவசரம், சின்ன விஷயத்திற்கும் கோபம்... இது இளைஞர்களின் தவறா? இல்லை, வேகமாக ஓடும் இந்த உலகத்தின் விளைவா? இதுபற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? வாங்க, மக்கள் கருத்தை கேட்கலாம்!

இதில், 78 சதவீதம் பேர் இன்றைய தலைமுறையினருக்கு பொறுமை இல்லை என்றும் 22 சதவீதம் பேருக்கு பொறுமை இருக்கிறது என்றும் ஒரு சதவீதம் பேர் சருத்து இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

யூடியூபில்-பொறுமை இல்லை என 6 சதவீதம் பேரும், இருக்கிறது என்று 93 சதவீதம் பேரும், கருத்தில்லை என ஒருவரும் பதில் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம்- இல்லை என 44 சதவீதம் பேரும், ஆம் என்று 56 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

டுவிட்டர்-பொறுமை இல்லை என 44 சதவீதம் பேரும், ஆம் என்று 86 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT