புதுடெல்லி:
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 1.25μm பிக்சல் சென்சார், 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி செல்ஃபி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 5 போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. 7.7 மில்லிமீட்டர் அளவு மெல்லியதாக இருக்கும் ரெட்மி 5 முந்தைய ரெட்மி 4-ஐ விட 11% மெல்லியதாக இருக்கிறது.
சியோமி ரெட்மி 5 சிறப்பம்சங்கள்:
- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
- அட்ரினோ 506 GPU
- 2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், f/2.2 அப்ரேச்சர், PDAF
- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் லேக் புளூ என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரெட்மி 5 (2 ஜிபி ரேம்) விலை ரூ.7,999, 3 ஜிபி ரேம் மாடல் ரூ.8,999 மற்றும் 4 ஜிபி ரேம் மாடல் ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ரெட்மி 5 ஸ்மார்ட்போன் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளம், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் அமேசான் வலைத்தளம் உள்ளிட்டவற்றில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரெட்மி 5 ஸ்மார்ட்போன் மார்ச் 20-ம் தேதி துவங்கும் நிலையில், ரெட்மி 5 ஸ்மார்ட்போனினை ஆஃப்லைனிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இத்துடன் புதிய ரெட்மி 5 வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 உடனடி கேஷ்பேக், 100% கூடுதல் 4ஜி டேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.