தொழில்நுட்பம்

விவோ V80 5G: இந்தியாவில் அக்டோபர் 6-ல் அறிமுகம்- தூள் கிளப்ப வரும் 3 முக்கிய அம்சங்கள்!

விவோ V80 5G போனின் முதன்மை சிறப்பம்சமாக அதன் கேமரா அமைப்பு பார்க்கப்படுகிறது.

மென்பொருள் பிரிவிலும் இந்த போன் முக்கிய மாற்றத்தை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 17 அடிப்படையிலான புதிய ‘ஆரிஜின் OS 7’ இயங்குதளத்தில் இது செயல்படும்.

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ, தனது புதிய ‘விவோ V80 5G’ மாடலை வரும் அக்டோபர் 6, 2026 அன்று இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது. வழக்கமான வி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விட இதில் பல்வேறு நவீன அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜீஸ் கேமரா

விவோ V80 5G போனின் முதன்மை சிறப்பம்சமாக அதன் கேமரா அமைப்பு பார்க்கப்படுகிறது. இதில் 50 மெகாபிக்சல் சோனி LYTIA 700V முதன்மை கேமரா, 3X ஆப்டிகல் ஜூம் வசதி கொண்ட 50 மெகாபிக்சல் நைட் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா ஆகிய மூன்று பின்னாடி கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஐபோனில் உள்ளதைப் போன்ற ‘4K சினிமாட்டிக் மோட்’ வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் தெளிவான செல்ஃபி புகைப்படங்களுக்காக 50 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

7,200mAh பேட்டரி

ஸ்மார்ட்போன் பயனர்களின் பயன்பாட்டு நேரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த மாடலில் மிகப்பெரிய 7,200mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதிநவீன குவால்காம் பிராசஸருடன் இணைந்து செயல்படும் இந்த பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால் பல மணிநேரம் தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடிய திறனை வழங்குகிறது.

புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்

மென்பொருள் பிரிவிலும் இந்த போன் முக்கிய மாற்றத்தை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 17 அடிப்படையிலான புதிய ‘ஆரிஜின் OS 7’ இயங்குதளத்தில் இது செயல்படும். இது பயனர்களுக்கு வேகமான மற்றும் மென்மையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது சிறப்பு தள்ளுபடி விலையில் இந்த போனை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

SCROLL FOR NEXT