விவோ நிறுவனத்தின் X200T ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தலைசிறந்த கேமரா, பிளாக்ஷிப் தர செயல்திறன் மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன.
இந்திய சந்தையில் ரூ. 69,999 விலையில் விற்பனை செய்யப்ட்டு வரும் விவோ X200T ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் சிறப்பு விற்பனையில் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.
ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் சிறப்பு விற்பனையில் இந்த விவோ X200T ஸ்மார்ட்போனின் 512 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 7,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ரூ. 69,999-க்கு விற்பனை செய்யப்பட்ட விவோ X200T ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 62,999 விலையிலேயே விற்பனைக்கு கிடைக்கிறது. இ்த சலுகையை பெற பயனர்கள் எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்க வேண்டும்.
மேலும், இந்த தள்ளுபடி ஸ்டாக் இருக்கும் வரை அல்லது குறிப்பிட்ட நேரம் என குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடலாம்.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 2800x1260 பிக்சல் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று 50MP சென்சார்களும், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கேமரா சார்ந்து பல்வேறு அம்சங்கள் மற்றும் பிரத்யேக போட்டோ மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓ.எஸ். கொண்டிருக்கும் விவோ X200T ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மாரட்போன் 6200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் விவோ X200T 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி சென்சார்களுடன் வருகிறது.