சோனி நிறுவனம் இந்தியாவில் தனது முதன்மை மாடல்களான பிராவியாவின் 9 மார்க் II மற்றும் 7 மார்க் II ஆகியவற்றை சந்தையில் அறிமுகம் செய்கிறது.
சோனி நிறுவனத்தின் பிராவியா 9 மார்க் II மேம்படுத்தப்பட்ட ட்ரூ ஆர்ஜிபி டிஸ்ப்ளே தொழில் நுட்பத்துடன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது.
சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள தொலைக்காட்சிகளில், சிவப்பு, பச்சை மற்றும் நீல நிற LED-க்கள் மூலம் பார்வையாளர்களின் கண்களுக்கு அசல் காட்சிகளை திரையில் வழங்குகிறது.
இந்த வகை சோனி மாடல் தொலைக்காட்சிகள் உள்ளமைக்கப்பட்ட ஜெமினி ஏஐ மற்றும் வாய்ஸ் ஜூம் 3 போன்ற குரல் மேம்படுத்தல் அம்சங்களுடன், கூகுள் இயங்குதளத்தில் இயங்குகிறது.
பிராவியா 9 மார்க் II, 75 இன்ச் அதிகபட்ச விலை ரூ.8,39,900 ஆகவும், பிராவியா 9 மார்க் II, 85 இன்ச் அதிகபட்ச விலை ரூ.9,89,900 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.