அறிந்து கொள்ளுங்கள்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜிடிஏ 6 முன்பதிவு: புது அப்டேட் கொடுத்த ராக்ஸ்டார் கேம்ஸ்

ஜிடிஏ 6 கேம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 முன்பதிவுகளை ராக்ஸ்டார் கேம்ஸ் ஒருவழியாக உறுதிப்படுத்தியது. அதிகம் எதிர்பார்க்கப்படும் ஓபன் வொர்ல்டு கிரைம் கேம் வருகிற நவம்பர் 19-ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த கேமிற்கான முன்பதிவுகள் ஜூன் 25-ஆம் தேதி தொடங்கும் என்று ராக்ஸ்டார் கேம்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக பலமுறை இந்த கேம் வெளியீடு பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இதன் முன்பதிவு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. முன்பதிவு அப்டேட் வெளியான நிலையில் ஜிடிஏ 6 கேமிற்கான 3-ஆவது டிரெய்லர் வெளியீடு குறித்து எந்த தகவலும் இல்லை.

பிளே ஸ்டேஷன் 5 மற்றம் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ், எக்ஸ் சாதனங்களுக்கான ஜிடிஏ 6 முன்பதிவோடு அதன் விலை விவரங்களும் ஜூன் 25-ஆம் தேதி தெரியரும். தற்போதைக்கு ஜிடிஏ 6 கேமினை ரசிகர்கள் பிளே ஸ்டேஷன் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் விஷ்லிஸ்ட் செய்ய முடியும்.

முன்பதிவு நாளிலேயே ஜிடிஏ 6 கேமிற்கான மூன்றாவது டிரெய்லரும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ஜிடிஏ 6 முன்பதிவு குறித்து ராக்ஸ்டார் கேம்ஸ் புது வீடியோவை பகிர்ந்துள்ளது.