அறிந்து கொள்ளுங்கள்

Reliance Jio | ரூ. 365 விலையில் புது சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ - என்னென்ன பலன்கள்?

மூன்று மாதங்கள் வரை ஜியோஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் மற்ற நிறுவனங்களை போன்றே ஜியோ நிறுவனமும் அவ்வப்போது தனது ரீசார்ஜ் திட்டங்களை மாற்றியமைத்து வருகிறது.

அந்த வரிசையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 365 விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் ஜியோ வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியில் கிடைக்கிறது.

பலன்களை பொருத்தவரை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 365 ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இத்துடன் 25 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் இணைய சேவையை நொடிக்கு 64 கிலோபைட் (64Kbps) என்ற வேகத்தில் பயன்படுத்த முடியும். இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

இத்துடன் ரூ. 7.47 டாக்-டைம் தொகையும் இந்த ரீசார்ஜ் வழங்குகிறது. கூடுதல் பலன்களை பொருத்தவரை மூன்று மாதங்கள் வரை ஜியோஹாட்ஸ்டார் (மொபைல்/டி.வி.), 50 ஜி.பி. வரை ஜியோ ஏ.ஐ. கிளவுட் ஸ்டோரேஜ், ஜியோ டி.வி. சந்தா வழங்கப்படுகிறது. இவற்றுடன் 18 மாதங்களுக்கான கூகுள் ஜெமினி ப்ரோ சந்தா வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ. 35,100 ஆகும். இதில் 200 ஜி.பி. வரை கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது.

எனினும், இந்த பலன்களை பயன்படுத்த பயனர்கள் ரூ. 349 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். புதிய ரூ. 365 ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

SCROLL FOR NEXT