இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ரூ. 50 விலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் நவம்பர் 26-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும். இந்த ரூ. 50 திட்டத்தில், இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் டேட்டா வசதி வழங்கப்படுகிறது. இது போன்ற சலுகையை ஏற்கனவே வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த டேட்டா ரீசார்ஜை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஆகிய இரு வழிகளிலும் செய்துகொள்ளலாம். புத்தாண்டுக்கான புதிய சலுகையின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரூ. 50 பிரீபெய்ட் திட்டத்தில், இரவு நேரங்களில் பயன்படுத்தக்கூடிய அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா வசதியை தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இரவு நேர பணியாளர்கள், மாணவர்கள், கேமர்கள் மற்றும் நீண்ட நேரம் இணையத்தில் வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் பயன்படுத்தப்படும் டேட்டா, பகல் நேர டேட்டா இருப்பில் இருந்து கழிக்கப்படாது. எனவே, உங்கள் முதன்மை திட்டத்தில் உள்ள டேட்டா அப்படியே இருக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
இது 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். அதாவது, நீங்கள் 4ஜி அல்லது 5ஜி கவரேஜ் பகுதியில் இருந்தாலும், அன்லிமிட்டெட் டேட்டா பெறலாம். ஏற்கனவே ஜியோ பயனர்களுக்காக ரூ. 15 மற்றும் ரூ. 25 விலையில் 5ஜி டேட்டா சலுகைகள் உள்ளன. இதில் ரூ. 15 திட்டமானது 1 நாள் வேலிடிட்டி கொண்டது.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு முழுமையான அன்லிமிட்டெட் டேட்டாவை வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைய ரூ. 50 திட்டத்தை பொறுத்தவரை, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே அன்லிமிட்டெட் டேட்டா கிடைக்கும். எனவே, இரவு நேரங்களில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் ஏற்றதாக இருக்கும்.
இந்த திட்டத்தில் படவுன்லோட்களுக்கு எந்த டேட்டா வரம்பும் இல்லை, அதேபோல் இணைய வேகமும் குறைக்கப்படாது. ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் இத்தகைய அன்லிமிட்டெட் டேட்டா வசதியை வழங்குகிறது. ஜியோவின் 5ஜி சேவையை பயன்படுத்தும் பயனர்கள் எவ்வளவு தரவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்; இதற்கு எந்த வரம்பும் இல்லை.