அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ தனது சாட்ஜிபிடி சாட்பாட் மூலம் உலகெங்கிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் ஓபன் ஏஐ, ஏஐ அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
ஆய்வாளர் மிங்-சி குவோ, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் இதை வெளிப்படுத்தியுள்ளார்.
தகவலின்படி, MediaTek மற்றும் Qualcomm நிறுவனங்களுடன் இணைந்து ஓபன் ஏஐ தனது சொந்த ஸ்மார்ட்போன் புரோசஸர்களை உருவாக்கி வருகிறது. இதன் உற்பத்தி 2028ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் என்பது இப்போது செயலிகளின் தொகுப்பாக உள்ள நிலையில் ஓபன் ஏஐ உருவாகும் இந்த போன் முழுக்க முழுக்க ஏஐ ஏஜென்ட்டை சார்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏஐ மூலம் போன் பயனர்கள் எளிதில் போனில் தங்களுக்கு தேவையானவற்றை உபயோகிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இது நாம் போன் பயன்படுத்தும் முறையையே முற்றிலும் மாற்றும் என்றும் இதுவே ஸ்மார்ட்போன்களின் எதிர்காலம் என்றும் கூறப்படுகிறது.
ஓபன் ஏஐ திட்டம்
பயனரின் முழுமையான அன்றாட செயல்பாடுகளை புரிந்துகொள்ள ஸ்மார்ட்போன் மட்டுமே சிறந்த கருவியாகும்.
எனவே ஒரு சிறந்த ஏஐ சேவையை வழங்க வேண்டுமானால், அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஹார்டுவேர் இரண்டையும் ஓபன்ஏஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
இந்த முறையில் உங்கள் போன் உங்களை எப்போதும் கவனித்து, உங்கள் சூழலைப் புரிந்துகொண்டே இருக்கும்.
இதன் மூலம் ஏஐ மூலம் எளிதாக்கபட்ட, பயனர்களுக்கு ஏற்ற முறையில் சேவைகளை வழங்கவும் செயல்படவும் முடியும் என்று நம்பப்படுகிறது.