தனது வர்த்தக ரகசியங்களை திருடியதாகவும், வன்பொருள் வழங்குநர்களுக்கான தனது அணுகலை தடுத்ததாக ஆப்பிள் நிறுவனம் மீது குற்றம் சாட்டி, ஓபன்ஏஐ ஒரு புதிய சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
ஓபன்ஏஐ நிறுவனம் நேற்று (வெள்ளிக்கிழமை) கலிபோர்னியா நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு ராய்ட்டர்ஸ் விடுத்த கோரிக்கைகளுக்கு ஆப்பிள் மற்றும் ஓபன்ஏஐ நிறுவனங்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை.
செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை உருவாக்குவதற்கான போட்டி தீவிரமடைந்து, திறமையாளர்கள் மற்றும் தனியுரிம தொழில்நுட்பத்திற்கான போட்டியை தூண்டுவதால், இரு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சாட்ஜிபிடி (ChatGPT) உரிமையாளரான் ஓபன்ஏஐ நுகர்வோர் வன்பொருள் சந்தை நுழைவுக்கு பயனளிக்கும் வகையில், தனது வர்த்தக ரகசியங்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் அதன் இரண்டு முன்னாள் ஊழியர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. ஓபன்ஏஐ இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.