அறிந்து கொள்ளுங்கள்

இனி எல்லோரும் இலவசமாக AI வீடியோக்களை உருவாக்கலாம்.. 'கூகுள் Vids' சூப்பர் அறிவிப்பு

Vids-இல் இடம்பெற்றுள்ள புதிய Veo 3.1 மாடல் மூலம், நீங்கள் வெறும் Prompt-ஐ தட்டச்சு செய்தோ அல்லது ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றியோ வீடியோ கிளிப்களை உருவாக்க முடியும்.

கூகுள் நிறுவனம் தனது Vids தளத்தை இனி அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

Vids-இல் இடம்பெற்றுள்ள புதிய Veo 3.1 மாடல் மூலம், நீங்கள் வெறும் Prompt-ஐ தட்டச்சு செய்தோ அல்லது ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றியோ ஏஐ தொழில்நுட்பம் மூலம் வீடியோ கிளிப்களை உருவாக்க முடியும்.

கூகுள் கணக்கு வைத்துள்ள அனைவரும் ஒவ்வொரு மாதமும் 10 வீடியோக்களை முற்றிலும் இலவசமாக உருவாக்கிக்கொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள யூடியூபர்கள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உருவாக்குபவர்கள் மற்றும் சிறுதொழில் செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

விளம்பர வீடியோக்கள் அல்லது பிறந்தநாள் வாழ்த்துகளை உருவாக்க இது மிகச்சிறந்தது.

அதேபோல காப்புரிமை சிக்கல்கள் இல்லாத இசையை Lyria 3 கருவி மூலம் நீங்களே உருவாக்கலாம்.

30 வினாடிகள் முதல் 3 நிமிடங்கள் வரை உங்கள் தேவைக்கேற்ப இசையை அமைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் கேமராவிற்கு முன்னால் வர விரும்பவில்லை என்றால், உங்களுக்காகப் பேச AI Avatars-ஐ உருவாக்கி பயன்படுத்தலாம்.

அவர்களின் தோற்றம், பின்னணி மற்றும் பேசும் ஸ்டைலை நீங்களே மாற்றியமைக்கலாம்.

வீடியோவை உருவாக்கி முடித்ததும், அதைத் தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக யூடியூபில் பதிவிடலாம்.

இந்தியாவில் தற்போது வீடியோ கன்டென்ட் உருவாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் இந்த இலவச சேவை கவனம் ஈர்த்து வருகிறது.