எதில் தான் ஏஐ இல்லை எனும் அளவுக்கு எல்லாவற்றிலும் ஏஐ நுழைந்துவிட்டது. ஆபத்துகள் அதில் இருப்பதாக ஒருபுறம் கூறப்பட்டாலும் மறுபுறம் அவை ஆக்கபூர்வமாக பரவலாக பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.
அந்த வகையில் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே அமையவுள்ள இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரெயில் திட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட உள்ளது.
ரெயிலில் பொருத்தப்படும் பிரத்யேக சென்சார்கள் மூலம் தண்டவாளக் குறைபாடுகளைக் கண்டறிவதில் இந்த அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் சென்றுகொண்டிருக்கும்போது அதில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் இந்த ஏஐ அமைப்பு தண்டவாளங்களில் உள்ள சிறிய குறைபாடுகளையும் கண்டறிந்து ரெயிலின் வேகத்தை சுமார் 20 கிலோமீட்டர் வரை தானாகவே குறைக்கும்
இந்த அமைப்புக்கு Condition Based Monitoring (CBM) என்று அழைக்கப்படுகிறது. தண்டவாளங்கள் மட்டுமல்லாதுமோட்டார்கள், கதவுகள் உள்ளிட்ட ரெயிலின் பிற முக்கிய பாகங்களின் செயல்பாடுகளையும் இந்த அமைப்பு கண்காணிக்கும்.
முன்கூட்டியே அந்த பழுது குறித்து இந்த அமைப்பு எச்சரிக்கை செய்யும். எனவே பயணத்தின்போது நடக்கும் அசம்பாவிதங்கள் பெருமளவில் தவிர்க்கப்படும்.
தென் கொரியாவைச் சேர்ந்த Globiz நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை தயாரித்துள்ளது. வரும் மே மாதம் இந்த கங்காணிப்பு அமைப்புகளை இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்திற்காக வழங்கும் பணிகள் தொடங்கும் என Globiz தெரிவித்துள்ளது.