OpenAl நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ChatGPT-யின் இலவசப் பதிப்பை பயன்படுத்தும் பயனர்கள், இனிமேல் வரம்பற்ற உரைவழி உரையாடல்களைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், மூன்று GPT-5.6 மாடல்களில் மிகச் சிறியதான GPT-5.6 Luna, இலவச மற்றும் Go பயனர்களுக்கு இயல்புநிலையாக மாற உள்ளதாக தெரிவித்துள்ளத்து.
GPT-5.6 லூனா பதிப்பிற்கு மாறும் பணி இந்த வாரத்தில் நடைபெறும் என்றும் அதே சமயம், வரம்பற்ற உரை வழி உரையாடல்கள் அடுத்த வாரம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OpenAl, Plus அல்லது Pro திட்டங்களுக்குப் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அதன் முதன்மை GPT-5.6 Sol மாடலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மேம்படுத்தல்கள், “பயனர்களுக்கு மிகவும் நேரடியான பதில்களை அளிக்கவும், சரியான வடிவமைப்பை பயன்படுத்தவும், கூடுதல் விவரங்களைத் தவிர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்று அந்நிறுவனம் கூறுகிறது.
மேலும், “பயனர்களுக்கு தேவையான சூழலுடன் கூடிய நேரடியான பதில் கிடைக்கும்” என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய GPT-5.6 Sol, குறிப்பாக எண்கள், தேதிகள், ஆதாரங்கள், விதிகள் அல்லது அனுமானங்கள் போன்றவற்றில், குறைவான தவறுகளைச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உண்மை விவரங்கள் தேவைப்படும் நிதி, மருத்துவம் மற்றும் சட்டரீதியான கேள்விகள் குறித்த ஒரு உள் மதிப்பீட்டில் GPT-5.5 Instant உடன் ஒப்பிடும்போது, புதிய GPT-5.6 Sol-இல் பிழைகள் குறைவாக இருந்ததாக OpenAl கூறுகிறது.
பிளஸ் மற்றும் ப்ரோ சந்தாதாரர்கள் தங்களின் அன்றாடக் கேள்விகளுக்கு இதை விரைவாக வைத்துக்கொள்ளலாம் என்றும், திட்டமிடல், ஆராய்ச்சி, எழுதுதல், கோடிங் அல்லது அதிக சிந்தனை தேவைப்படும் முடிவுகளுக்கு அடுத்த நிலைக்கு நகர்த்தலாம் என்றும் OpenAl கூறுகிறது.
ChatGPT யில் உரைவழி உரையாடல்களுக்கு இனி வரம்புகள் இருக்காது என்றாலும், இலவச மற்றும் கோ பயனர்கள் கோப்பு பதிவேற்றங்கள் மற்றும் பட உருவாக்கத்தில் தொடர்ந்து வரம்புகளை எதிர்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.