செப்டம்பர் மாதம் தனது ஏஐ அசிஸ்டண்ட் அறிமுகப்படுத்திய மெட்டா தற்போது மற்றொரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ரியல்டைமில் உரையாடல்களை மேற்கொள்ள முடியும்.
'மியூஸ் வாய்ஸ்' (Muse Voice) என்று அழைக்கப்படும் இந்த அம்சம், மெட்டாவின் 'மியூஸ் ரியல்-டைம் அவதார்' உடன் இணைந்து செயல்படுகிறது. இது சைகைகள் மற்றும் முகபாவனைகளுடன் கூடிய, நிஜ மனிதர்களுடனான உரையாடல் போன்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்த அம்சம் தற்போது அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, விரைவில் பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.
செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அசிஸ்டண்ட், தற்போது கனடாவிலும் கிடைக்கிறது. இருப்பினும், அந்தந்த நாடுகளின் ஆப் ஸ்டோர் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த நாடுகளில் இல்லாத பயனர்களால் இந்த ஏஐ அசிஸ்டண்ட் சேவையை பயன்படுத்த முடியாது.
மெட்டாவின் 'மியூஸ்' ஏஐ அசிஸ்டண்ட் சேவைக்கு ஒரு முக்கிய மேம்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம், பயனர்கள் ஏஐ அசிஸ்டண்ட் உடன் ரியல்டைமில் உரையாடலாம். 'மியூஸ்' இனி மொபைல், இணையதளம் மற்றும் மேக் சாதனங்களில் கிடைக்கும் என்று மெட்டா அறிவித்துள்ளது. அப்டேட் பெற்ற பயனர்கள், போன் ஐகானை தட்டி உரையாடலை தொடங்கலாம்.
பயனர்கள் வீடியோ கால் போன்ற நேரடி உரையாடலை மேற்கொள்ளலாம், அல்லது சாட் உரையாடலின் போது ஒரு அவதாரத்தை திரையில் வைத்துக்கொள்ளலாம், அல்லது அவதாரம் இன்றி வெறும் குரல் வழி உரையாடலையும் மேற்கொள்ளலாம்.
ஒரு அழைப்பைத் தொடங்கி உங்கள் கேள்வியை கேட்டவுடன், பிரத்யேக 'மியூஸ்' அவதாரம் திரையில் தோன்றும். இது உங்கள் உரையாடலின் மனநிலை மற்றும் தொனிக்கு ஏற்ப முகபாவனைகளையும் சைகைகளையும் வெளிப்படுத்தும். 'மியூஸ் வாய்ஸ்' வசதியை கொண்ட இந்த ஏஐ அசிஸ்டண்ட், ரியல்டைமில் பதிலளிக்கும்போது, பயனர்கள் தங்கள் அவதாரம் அதற்கு ஏற்றவாறு எதிர்வினையாற்றுவதைக் காண முடியும்.
கூகுளின் 'ஜெமினி லைவ்' போலவே, 'மியூஸ்' பதிலளிக்கும்போது பயனர்கள் அதன் பேச்சை இடைமறித்து தங்கள் கருத்துகளை சேர்க்கலாம்; இது உரையாடலை இன்னும் இயல்பானதாக மாற்றுகிறது. மெட்டாவின் 'மியூஸ்' அசிஸ்டண்ட்-ஐ, பொதுவான உரையாடல்களுக்கு பயன்படுத்தலாம், தகவல்களைத் தேடலாம், மேலும் அதன் மேம்பட்ட செயல்பாட்டுத் திறன் மூலம் பல்வேறு பணிகளைச் செய்து முடிக்கலாம்.