அறிந்து கொள்ளுங்கள்

ரீசார்ஜ் செய்தால் கேன்வா சந்தா முற்றிலும் இலவசம் - ஜியோவின் அசத்தல் அறிவிப்பு

ஜியோ சந்தாதாரர்களுக்கு கேன்வாவின் பிரீமியம் டிசைன் டூல்ஸ் மற்றும் ஏஐ சார்ந்த அம்சங்களை வழங்குகிறது.

ஜியோ நிறுவனம் கேன்வாவுடன் இணைந்து, தகுதியுள்ள பயனர்களுக்கு 12 மாதங்கள் வரை கேன்வா ப்ரோ அல்லது கேன்வா ப்ரோ லைட் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.

இந்த தொகுப்பு , தனி சந்தா செலுத்தாமல் காட்சி உள்ளடக்கத்தை உருவாக்க விரும்பும் மாணவர்கள், கிரியேட்டர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறு வணிகங்கள் போன்ற ஜியோ சந்தாதாரர்களுக்கு கேன்வாவின் பிரீமியம் டிசைன் டூல்ஸ் மற்றும் ஏஐ சார்ந்த அம்சங்களை வழங்குகிறது.

இந்த சலுகை செப்டம்பர் 16, 2026 முதல் படிப்படியாக வழங்கப்படும், மேலும் கேன்வா திட்டம் பயனரின் ஜியோ ரீசார்ஜ் பொறுத்து அமையும்.

இரு திட்டங்களுடன் கேன்வா சந்தா:

இந்த புதிய கூட்டணி மூலம், தகுதியுள்ள ஜியோ பயனர்களுக்கு அவர்களின் தற்போதைய ரீசார்ஜை பொறுத்து, 12 மாதங்களுக்கு கேன்வா பிரீமியம் சேவை எந்த கூடுதல் கட்டணமும் இன்றி வழங்குகிறது. ரூ.399 திட்டத்தில் உள்ள பயனர்கள் கேன்வா ப்ரோவையும், ரூ.349 மற்றும் ரூ.349-க்கு மேல் விலையுள்ள, தகுதியுள்ள 2ஜிபி/நாள் திட்டங்களில் உள்ள பயனர்கள் கேன்வா ப்ரோ லைட் சந்தாவையும் பெறுவார்கள்.

இந்த இரண்டு திட்டங்களும் கேன்வாவின் பிரீமியம் டெம்ப்ளேட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்துருக்களுடன், பேக்ரவுண்ட் ரிமூவர், மேஜிக் ரீசைஸ், மேஜிக் எரேசர் போன்ற அம்சங்களை வழங்குகின்றன. இதன் மூலம் பயனர்கள் கேன்வாவின் பல பிரீமியம் வடிவமைப்பு அம்சங்களுக்கு தனியாக பணம் செலுத்தாமலேயே சேவையை பெறுகிறார்கள்.

கேன்வா சந்தா பலன்கள்:

தொடர்ந்து உள்ளடக்கத்தை உருவாக்கும் பயனர்களுக்காக கூடுதல் அம்சங்களை சேர்க்கும் கேன்வா ப்ரோவில்தான் முக்கிய வேறுபாடு உள்ளது. இதில் கன்டன்ட் பிளானர் (Content Planner), கேன்வா ஏஐ (Canva AI), அதிக ஏஐ பயன்பாட்டு வரம்புகள் மற்றும் ஒரு பெரிய பிராண்ட் கிட் (Brand Kit) ஆகியவை அடங்கும்.

அதேசமயம், ப்ரோ லைட் (Pro Lite) ஆனது வரையறுக்கப்பட்ட ஏஐ அணுகலுடன் (இலவசப் பதிப்பைப் போலவே) முக்கிய வடிவமைப்பு அம்சங்களுக்கு மட்டுமே தன்னை வரப்படுத்திக் கொள்கிறது.

தகுதியுள்ள பயனர்கள், மைஜியோ செயலி (MyJio app) மூலம் கேன்வா சலுகையை திறந்து அதை செயல்படுத்துவதன் மூலம் இந்த சலுகையை பெறலாம் என்று ஜியோ கூறுகிறது. இந்த 12 மாத பலன் செப்டம்பர் 16, 2026 முதல் வழங்கத் தொடங்கும், மேலும் சலுகை காலத்தில் கேன்வா சந்தாவிற்கு கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை.

SCROLL FOR NEXT