அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 16 வயது சிறுமி பிராஞ்சலி அவஸ்தி.
இவர் 'டெல்வ் ஏஐ' என்ற தனது செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனம் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
பொறியாளரான தந்தையின் வழிகாட்டுதலோடு தனது 7 வயதிலேயே கோடிங் கற்றுக்கொள்ளத் தொடங்கினார் பிராஞ்சலி.
தனது 13 வயதில் மெஷின் லேர்னிங் இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்றார்.
அப்போது, இணையத்தில் உள்ள தரவுகள் மற்றும் தகவல்களைத் தேடி பகுப்பாய்வு செய்வதில் உள்ள நேர விரயம் மற்றும் சிரமங்களை கவனித்தார்.
எனவே தகவல் தேடல் சிக்கலுக்கு ஒரு தீர்வாக கடந்த 2022 ஜனவரியில், தனது 16 வயதில் 'டெல்வ் ஏஐ' நிறுவனத்தை பிராஞ்சலி தொடங்கினார்.
ஆன்லைன் தரவுகள், கல்விசார் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பிடிஎப் கோப்புகளில் இருக்கும் தகவல்களை வேகமாக திரட்டி, தொகுத்து வழங்குவதே இந்த அவரின் ஏஐ நிறுவனம் உருவாக்கிய ஏஐ சாதனத்தின் வேலை ஆகும்.
பிராஞ்சலியின் இந்த ஏஐ புத்தொழிலில் ஆரம்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் சில முதலீடு செய்தன.
இந்த முதலீடுகளை கொண்டு திறம்படச் செயல்பட்டதன் விளைவாக மிகக் குறுகிய காலத்திலேயே 'டெல்வ் ஏஐ' நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 12 மில்லியன் டாலரை (ரூ. 100 கோடி) எட்டியுள்ளது. இதன்மூலம் அவர் தற்போது கவனம் பெற்று வருகிறார்.