அறிந்து கொள்ளுங்கள்

Google Chrome | ஹேக்கர்களிடம் இருந்து நிதி சார்ந்த தரவுகளை காப்பது எப்படி..? வெளியானது தீர்வு

குரோம் செயலியில் இணையத்தை பயன்படுத்தும்போது, ஹேக்கர்கள் மூலம் தனிப்பட்ட நிதி விவரங்கள் திருடப்பட்டு வருகிறது.

உலகளவில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வரும் குரோம் செயலியில், இணையவழி குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

குரோம் செயலியில் இணையவழி மோசடி:

குரோம் செயலியில் இணையத்தை பயன்படுத்தும்போது, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வலைதளங்கள் மூலம், அப்பாவி பயனர்களை ஏமாற்றி அவர்களின் கணினிகளில் செயலிகளை நிறுவ வைத்து, அவர்களின் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களை சில மோசடி கும்பல்கள் திருடி வருகிறது.

பயனர்கள் டார்க் நெட் எனப்படும் மறைமுக இணையத்தின் இருண்ட பக்கங்களில் அதிகம் உலாவ வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய இணைய தளங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டாலும், இணையதள நிறுவனங்கள் அவைகளை தங்கள் செயலிகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிய பரிசோதித்து பார்த்து வருகிறது.

சமீபத்தில், கூகுள் தனது குரோம் உலாவியில் பல பாதுகாப்புச் சிக்கல்களைக் கண்டறிந்துள்ளது. அவற்றை சரியான நேரத்தில் கண்டறிந்ததன் மூலம், அது தனது செயலிக்கு ஒரு பாதுகாப்பு பேட்சையும் பெற்றது.

புதுப்பிக்க வேண்டிய பயனர்கள்:

இதையடுத்து கணினி உரிமையாளர்கள் தங்களின் Chrome செயலிகளை, Windows மற்றும் Mac-கிற்கான 50.0.7871,124/.125 மற்றும் Linux-கிற்கான 150.0.7871.124 ஆகிய சமீபத்திய பதிப்புகளுக்குப் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், தங்கள் Chrome செயலியை குறிவைக்கும் இணைய வழி குற்றங்கள் தடுக்கப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

தீர்வு:

இந்நிலையில் பயனர்கள் தங்கள் கணினியில் Chrome-இன் சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்துவது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்களின் Chrome மெனுவிற்கு (மூன்று புள்ளிகள்) சென்று, ‘உதவி’(help) என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ‘கூகுள் குரோம் பற்றி’(about) என்பதைத் தேர்ந்தெடுத்தால், Chrome தானாகவே புதுப்பிப்புகளைச் சரிசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.