கூகுள் நிறுவனம் அடுத்ததாக சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் தனது foldable phone-களில், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு 17 இயங்குதளத்தில் இயங்கும் கேமிங் பயன்பாட்டு முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
புத்தக வடிவிலான மடிக்கக்கூடிய தொலைபேசிகளை, இரட்டைத் திரை கொண்ட நிண்டெண்டோ DS பாணியிலான கையடக்க கன்சோல் அமைப்பாக மாற்றுகிறது.
கூகுள் ஃபோல்டபிள் போன்களில் இணக்கமான விளையாட்டு ஒன்று தொடங்கப்பட்டவுடன், உள்ளே விரிந்திருக்கும் திரையைச் சரியாக நடுவில் சமமாகப் பிரிக்கிறது.
இதன்மூலம் இந்த வகை ஃபோல்டபிள் போன்களில், திரையின் மேல் பாதி கேமிங் அம்சமாகவும், திரையின் கீழ் பகுதி ஒரு பிரத்யேக மெய்நிகர் கேம்பேடாகவும் மாறும்.
கூகுள் பிக்சல் போன்களில் ஆண்ட்ராய்டு 17 ஏற்கனவே வெளியிடத் தொடங்கிவிட்ட போதிலும், இந்த பிரத்யேக கேமிங் அம்சம் வரும் மாதங்களில் பயனர்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.