அறிந்து கொள்ளுங்கள்

கூகுள் போட்டோஸ் செயலியில் ஏகப்பட்ட மாற்றங்கள் - புது அப்டேட் வெளியீடு

புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

கூகுள் நிறுவனம் தனது போட்டோஸ் செயலியில் புகைப்படங்களை எடிட் செய்வது, ஒருங்கிணைக்கவும் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கியுள்ளது.

இதற்காக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அப்டேட் மார்க்அப் டூல் அப்கிரேடு செய்துள்ளது. இத்துடன் புதிதாக ரெடாக்ட் பென், பழங்கால தோற்றத்தை ஏற்படுத்தும் புதுவகை எடிட்கள் மற்றும் ரீமிக்ஸ் டெம்ப்லேட் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.

ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்.-இல் வெளியீடு:

இதுதவிர ஏ.ஐ. சார்ந்து இயங்கும் wardrobe அம்சத்தை மேலும் பல பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், பயனர்கள் ஜெமினி ஸ்பார்க் கொண்டு புகைப்படங்களை ஒற்றை பிராம்ப்ட் மூலம் தேர்வு செய்தல், அதன் பிரைட்னஸை மாற்றி அதனை பகிர முடியும்.

புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் அம்சங்கள் மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்றவாரு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

புதுவகை எடிட் அம்சங்கள்:

கூகுள் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட மார்க்அப் டூல் அம்சத்தை ஆண்ட்ராய்டு தளங்களில் உலகளவில் வெளியிட தொடங்கியது. இந்த அம்சம் பயனர்கள் குறிப்பிட்ட புகைப்படத்தில் முக்கிய விரங்களை மறைக்க (பிளர்) செய்யும். இத்துடன் புகைப்படத்தில் எழுத்துககளை சேர்க்கவும் அனுமதிக்கிறது.

இதேபோல் கூகுள் நிறுவனம் Moods அம்சத்தினை உலகளவில் ஆண்ட்ராய்டு தளத்தில் வெளியிட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் புகைப்படங்கள் 35mm ஃபிலிம் மற்றும் 2000-க்களில் இருந்த டிஜிகேம் மற்றும் இதர பழைய கால ஃபார்மேட்களில் இருப்பதை போல் மாற்ற உதவும்.

Wardrobe அம்சம் அறிமுகம்:

இந்த அப்டேட் கூகுள் போட்டோஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் 15 ரீமிக்ஸ் டெம்ப்லேட்களை வழங்குகிறது. இவை புகைப்படங்களை பல்வேறு விதங்களில் மாற்ற அனுமதிக்கிறது.

இதேபோல் கூகுள் தனது wardrobe அம்சத்தை அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

இதை கொண்டு பயனர்கள் பலவித ஆடைகளை ஒருங்கிணைத்து புதுவகை ஆடைகளை முயற்சிக்க முடியும். இந்த அம்சம் பயனர்கள் விர்ச்சுவல் முறையில் ஸ்டைலிங் செய்து பார்க்கவும், புதுவித தோற்றத்தை முயற்சிக்கவும் வழிவகை செய்யும்.

SCROLL FOR NEXT