அறிந்து கொள்ளுங்கள்

3D வடிவில் துல்லியமான ஏ.ஐ காட்சிகளை உருவாக்கும் ’ஜீனி 4’ செயலி - கூகுள் அறிமுகம்

கூகுள் டீப் மைண்ட் நிறுவனம், மெய்நிகர் சூழல்களுக்கு ஏற்ப பின்னணி உரையாடல்களை உருவாக்கும் ‘ஜீனி 4’ செயலியை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் டீப் மைண்ட் நிறுவனம் மெய்நிகர் சூழல்கள் மற்றும் காட்சிகளை உருவாக்கும் வகையில் ‘ஜீனி 4’ என்ற மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகம் செய்துள்ளது.

உலக சந்தையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஏ.ஐ செயலிகள் மூலம் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஜீனி 4 செயலி

இதனடிப்படையில் கூகுள் டீப் மைண்ட் நிறுவனம், மெய்நிகர் சூழல்களுக்கு ஏற்ப பின்னணி உரையாடல்கள் மற்றும் இசை ஒலிகளை உருவாக்கும் மேம்படுத்தப்பட்ட ‘ஜீனி 4’ செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய பதிப்பு காட்சி யதார்தத்தை மேம்படுத்தி, பல புதிய திறன்களுடன் ஒலி உருவாக்கத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜீனி 4 செயலியை பயனர்கள் பயன்படுத்தும் போது, வானிலை நிலைகளை மாற்றலாம் என்றும், கேமரா கோணங்களை சரி செய்து, புதிய கதாபாத்திரங்களை ப்ராம்ப்ட் (prompt) மூலம் அறிமுகம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெய்நிகர் வீடியோக்கள்

ஜீனி 4 செயலி, அதன் முந்தைய பதிப்பை விட இரண்டு மடங்கு அதிவேகத்தில் வீடியோக்களை உருவாக்கி மெய்நிகர் கதாபாத்திரங்களை 3டி வடிவில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஜீனி 4 செயலி, ஜெமினி ஏ.ஐ செயலியுடன் ஒருங்கிணைந்து, அதற்கேற்ப காட்சிகளை உருவாக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT