அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் வெளியான ஃப்ரீ ஃபயர் கேமிங் செயலி - பிரத்யேக அம்சங்கள், பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்

கரீனா நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு ’ஃப்ரீ ஃபயர் மேக்ஸ்’ (Free Fire) என்ற கேமிங் செயலியை அறிமுகம் செய்தது.

இந்தியாவில் கேம் பிரியர்கள் அதிகமாக விளையாடி வரும் ஃப்ரீ ஃபயர் (Free Fire) விளையாட்டின் இந்தியாவிற்கான பிரத்யேக பதிப்பை கரீனா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

கரீனா நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு ’ஃப்ரீ ஃபயர் மேக்ஸ்’ (Free Fire) என்ற கேமிங் செயலியை அறிமுகம் செய்தது.

இதையடுத்து 2022 இல் வெளியான ’அசல் ஃப்ரீ ஃபயர்’ கேமிங் செயலி, சீன செயலிகளுடன் சேர்த்து இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இதன்காரணமாக இந்தியாவில் 2021 இல் வெளியான ஃப்ரீ ஃபயர் மேக்ஸ் செயலி மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்தது.

பிரத்யேக பதிப்பு

இந்த நிலையில் புதிய கிராபிக் காட்சிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஃப்ரீ ஃபயர் செயலியை பிரத்யேகமாக இந்தியாவில் கரீனா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக பதிப்பில், பயனர்களுக்கான பொறுப்பான விளையாட்டு அம்சங்கள் மற்றும் பலதரப்பட்ட ஸ்மார்ட் போன்களுக்கான ஆதரவு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் ஒப்புதல்கள்

இந்த விளையாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட பயனர்களுக்கான பெற்றோர் ஒப்புதல் தேவைகள், இடைவேளை நினைவூட்டல்கள், தினசரி விளையாட்டு நேர உச்சவரம்புகள் மற்றும் செலவு கட்டுப்பாடுகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர உச்சவரம்பு

ஃப்ரீ ஃபயர் செயலியை விளையாடுபவர்கள், தினமும் ஆறு மணி நேரம் விளையாடலாம் என்றும், அதேசமயம் 18 வயதுக்குட்பட்ட பயனர்கள் மூன்று மணி நேரம் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம்

ஃப்ரீ ஃபயர் கேமிங் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மேலும் கூடுதல் தகவல்களுக்கு https://ffindia.garenaind.com/ என்ற இணையதளத்தை பார்வையிடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT