அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் சாட்டிலைட் போன் அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்.

கடினமான சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கான நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி ஆகியவற்றுடன் வருகிறது.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இந்தியாவில் சாட்டிலைட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வழக்கமான மொபைல் நெட்வொர்க் வசதி இல்லாத பகுதிகளில் செயல்படும் பயனர்களுக்கான தனது செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளை பி.எஸ்.என்.எல். விரிவுபடுத்தியுள்ளது.

இன்மார்சாட் அடிப்படையிலான இந்த கைபேசி, செயற்கைக்கோள் குரல் அழைப்புகள் மற்றும் SMS சேவைகளை ஆதரிக்கிறது. மேலும் இது பாதுகாப்பு, கடல்சார் நடவடிக்கைகள், பேரிடர் மீட்பு, சுரங்க தொழில், தொலைதூர பணிகள் மற்றும் சாகச பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது SOS அவசரகால அம்சம், உறுதியான கட்டமைப்பு மற்றும் கடினமான சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கான நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி ஆகியவற்றுடனும் வருகிறது.

விலை விவரங்கள்:

எக்ஸ் தளத்தில் வெளியான அறிவிப்பின்படி, பி.எஸ்.என்.எல். அனைத்து வரிகளையும் சேர்த்து சாட்டிலைட் போன் (செயற்கைக்கோள் தொலைபேசி) விலையை ரூ. 1,34,166 என நிர்ணயித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குச் சென்றோ அல்லது அதன் பிரத்யேக உதவி எண்ணை தொடர்பு கொண்டோ மேலும் தகவல்களை பெறலாம்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின்படி, வழக்கமான மொபைல் நெட்வொர்க்குகளின் வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் இணைப்பை வழங்குவதற்காக இந்த சாட்டிலைட் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது செயற்கைக்கோள் இணைப்பு மூலம் குரல் அழைப்புகளை ஆதரிப்பதாகவும், பாதுகாப்பு, கடல்சார் நடவடிக்கைகள், பேரிடர் மீட்பு, சுரங்க தொழில், தொலைதூர செயல்பாடுகள் மற்றும் சாகச பயணங்கள் போன்றவற்றுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அம்சங்கள்:

இந்தக் கைபேசியானது மிகத் தெளிவான வாய்ஸ் கால், SOS அவசரகால உதவி அம்சம், உறுதியான வடிவமைப்பு மற்றும் சவாலான சூழல்களில் பயன்படுத்துவதற்கான நீடித்து உழைக்கும் பேட்டரி ஆகியவற்றை வழங்குகிறது என பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல். சாட்டிலைட் போன், இன்மார்சாட் கைபேசியை பயன்படுத்துகிறது. மேலும் இது, செயற்கைக்கோள் இணைப்பு வழியாக குரல் அழைப்புகளுடன் எஸ்.எம்.எஸ். சேவைகளையும் ஆதரிக்கிறது.