அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் தனது 7-ஆவது கடையை திறக்கும் ஆப்பிள்

புதிய இடத்தில் நடைபெறும் இலவச கடை அமர்வுகளிலும் அவர்கள் பங்கேற்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் தெலுங்கா மாநிலத்தின் ஐதராபாத்தில் தனது முதல் சில்லறை விற்பனை கடையை திறக்க தயாராகி வருகிறது. 'ஆப்பிள் குக்கட்பள்ளி' என்று அழைக்கப்படும் இந்த புதிய கடை, இந்தியாவில் அந்நிறுவனத்தின் ஏழாவது சில்லறை விற்பனை நிலையமாக திறக்கப்படவுள்ளது.

இந்த புதிய கடையின் மூலம், குபெர்டினோவை தலைமையிடமாக கொண்ட இந்த தொழில்நுட்ப ஜாம்பவான், நாட்டின் தென்பகுதியில் தனது இருப்பை விரிவுபடுத்தும்.

ஆப்பிளின் சமீபத்திய தயாரிப்புகள் இந்த புதிய கடை மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இந்த புதிய கடை வழியாக தொழில்நுட்ப ஆதரவையும் பெறலாம். மேலும், இந்த புதிய இடத்தில் நடைபெறும் இலவச கடை அமர்வுகளிலும் அவர்கள் பங்கேற்கலாம்.

ஸ்டோர் திறக்கும் தேதி:

குக்கட்பள்ளியில் உள்ள ஆப்பிள் விற்பனையகம் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. இந்த விற்பனையகம் ஐதராபாத்தின் குக்கட்பள்ளியில் உள்ள லேக் ஷோர்-ஒய் ஜங்ஷன் மாலில் அமைந்துள்ளது. இது, நகரில் ஆப்பிளின் முதல் நேரடி சில்லறை விற்பனையகம் மற்றும் இந்தியாவில் அதன் ஏழாவது விற்பனை நிலையம் ஆகும்.

கடை திறப்பு விழாவுக்கு முன்னதாக, அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக ஆப்பிள் குக்கட்பள்ளி வால்பேப்பர்களையும் ஸ்டிக்கர்களையும் கிடைக்க செய்துள்ளது. மேலும், ஐதராபாத்தின் இசை மற்றும் உள்ளூர் ஒலிகளால் ஈர்க்கப்பட்ட ஆப்பிள் மியூசிக் பிளே லிஸ்ட் ஆகியவற்றையும் அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சாதனங்களை பார்வையிடலாம்:

ஐதராபாத்தில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவும், சில்லறை வாடிக்கையாளர் சேவை குழுவும் அமைந்துள்ளன. இந்த புதிய அங்காடி, இப்பகுதியில் ஆப்பிளின் சில்லறை விற்பனை இருப்பை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 18 ப்ரோ , ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் டியோ உள்ளிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆப்பிள் குக்கட்பள்ளியில் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், PRO-LED XDR டிஸ்ப்ளே மற்றும் டச் வசதியுடன் கூடிய மேக்புக் ப்ரோ, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4, ஏர்பாட்ஸ் 5, ஹோம்வியூ மற்றும் ஹோம்பாட் மினி 2 உள்ளிட்ட பிற சாதனங்களையும் பார்வையிடலாம்.

SCROLL FOR NEXT