ரெட்மி நோட் 10டி 5ஜி 
தொழில்நுட்பம்

ரூ. 13,999 அறிமுக விலையில் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ 90Hz டைனமிக் ஸ்விட்ச் டாட் டிஸ்ப்ளே, 8 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 10டி 5ஜி அம்சங்கள்

- 6.5 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்

- மாலி-G57 MC2 GPU

- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி

- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5

- ஹைப்ரிட் டூயல் சிம் 

- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்

- 2 எம்பி டெப்த் கேமரா

- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4 

- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0

- பக்கவாட்டில் கைரேகை சென்சார்

- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ 

- டூயல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1,

- யுஎஸ்பி டைப் சி

- 5000 எம்.ஏ.ஹெச். 

- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

ரெட்மி நோட் 10டி 5ஜி மெட்டாலிக் புளூ, மின்ட் கிரீன், குரோமியம் வைட் மற்றும் கிராபைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999 ஆகும். இவை அறிமுக விலை தான், விரைவில் மாற்றப்படும் என சியோமி தெரிவித்து இருக்கிறது.