மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் லோ பேண்ட்வித் மோட் வழங்கப்பட இருக்கிறது. பொதுவாக வீடியோ கால் மேற்கொள்ள அதிவேக இணைய வசதி கட்டாயம் தேவைப்படும். இதோடு அதிக பயனர்கள் இணையும் போது லிமிடெட் நெட்வொர்க் பயன்படுத்துவோருக்கு நிலைமை மேலும் மோசமாக மாறும்.
இதனை எதிர்கொள்ள மைக்ரோசாப்ட் டீம்ஸ் தேவைக்கு ஏற்ப இணைய பயன்பாட்டை மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்க இருக்கிறது. இந்த அம்சம் கணினியில் டீம்ஸ் பயன்படுத்துவோருக்கு மட்டும் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாதத்திலேயே புதிய அம்சம் உலகளவில் வழங்கப்படுகிறது.
புது அம்சம் பற்றிய விவரங்கள் மைக்ரோசாப்ட் 365 ரோட்மேப் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. குறைவான இணைய வேகம் கிடைத்தாலும் டீம்ஸ் வீடியோ கால் மேற்கொள்ளும் போது டேட்டா பயன்பாட்டை குறைக்கும் புதிய லோ டேட்டா மோட் உதவுகிறது என மைக்ரோசாப்ட் தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
முன்னதாக மைக்ரோசாப்ட் இக்னைட் 2021 நிகழ்வில் மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வசதி, ஆயிரம் பேருடன் வெபினார் செய்வதற்கான வசதி, சேனல்-ஷேரிங் அம்சம் என பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.