பிஎஸ்என்எல் 
தொழில்நுட்பம்

பிஎஸ்என்எல் பிரீபெயிட் சலுகை பலன்களில் திடீர் மாற்றம்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1999 பிரீபெயிட் சலுகையில் மாற்றம் செய்வதாக திடீரென அறிவித்து உள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ. 1999 விலை பிரீபெயிட் சலுகை பலன்களில் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாற்றப்பட்ட ரூ. 1999 சலுகையில் லாக்துன் சந்தா, இரோஸ் நௌ சந்தா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர இந்த சலுகை பலன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 1999 சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இத்துடன் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஒடிடி பலன்கள் சேர்த்து வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகையில் 60 நாட்களுக்கான லாக்துன் சந்தா வழங்கப்படுகிறது.

இத்துடன் இரோஸ் நௌ சேவைக்கான சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் ஒரு வருடத்திற்கான லாக்துன் சந்தா, 60 நாட்களுக்கு இரோஸ் நௌ சந்தா வழங்கப்பட்டு வந்தது. இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ. 1999 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.