கேலக்ஸி நோட் 20 லீக் 
தொழில்நுட்பம்

மூன்று பிரைமரி கேமரா, 30எக்ஸ் ஜூம் வசதியுடன் கேலக்ஸி நோட் 20

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள், 30எக்ஸ் ஜூம் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய விவரங்களின் படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுது.

புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், 10 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 

சாம்சங் கேலக்ஸி நோட் 20 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

6.7 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே

ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர், அட்ரினோ 650 ஜிபியு

ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு

8 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி மெமரி(UFS 3.1)

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ

சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்

12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS

64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.0, PDAF

12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2

10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2

வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)

ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

யுஎஸ்பி டைப் சி

4300 எம்ஏஹெச் பேட்டரி

25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிரான்ஸ், மிஸ்டிக் கிரே மற்றும் மிஸ்டிக் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் விரைவில் வெளியாகி விடும்.