ரியல்மி எக்ஸ் 
தொழில்நுட்பம்

ரியல்மி எக்ஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரியல்மி பிராண்டு தனது புதிய ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சீனாவில் கடந்த வாகம் அறிமுகமான ஸ்பைடர் மேன் எடிஷனில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரெட் நிற கஸ்டம் கேஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் சிறப்பம்சங்கள்

- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்

- அட்ரினோ 616 GPU

- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

- டூயல் சிம் ஸ்லாட்

- கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை

- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்

- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0

- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

- டூல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

- 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்