பானாசோனிக் நிறுவனத்தின் எலுகா ரே 500 ஸ்மார்ட்போன் நாட்டின் முன்னணி விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்ட எலுகா ரே 500 பழைய விலையில் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட எலுகா ரே 500 மரெயின் புளூ, ஷேம்பெயின் கோல்டு மற்றும் மோச்சா கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
பானாசோனிக் எலுகா ரே 500 சிறப்பம்சங்ள்:
- 5.0 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் IPS LCD, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.25 ஜிகாஹெர்டஸ் குவாட்கோர் பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- 4000 எம்ஏஎச் பேட்டரி
- ஹோம் பட்டனில் எம்பெட் செய்யப்பட்ட கைரேகை ஸ்கேனர்