புதுடெல்லி:
நோக்கியா 1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 1 ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
இத்துடன் குவாட்கோர் மீடியாடெக் சிப்செட், 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி செல்ஃபி கேமரா, 4ஜி வோல்ட்இ மற்றும் கோ எடிஷன் செயலிகளை சப்போர்ட் செய்கிறது.
நோக்கியா 1 சிறப்பம்சங்கள்:
- 4.5 இன்ச் 854x480 பிக்சல் FWVGA IPS டிஸ்ப்ளே
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737M சிப்செட்
- அட்ரினோ 304 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
- டூயல் சிம் ஸ்லாட்
- 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 2 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2150 எம்ஏஹெச் பேட்டரி
நோக்கியா 1 ஸ்மார்ட்போன் வார்ம் ரெட் மற்றும் டார்க் புளு நிறங்களில் கிடைக்கிறது. மார்ச் 28-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் நோக்கியா 1 விலை ரூ.5,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகைகள்:
- ஜியோ வழங்கும் ரூ.2,200 கேஷ்பேக் சலுகை
- ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 60 ஜிபி கூடுதல் டேட்டா
- 12 மாதங்களுக்கு விபத்து காப்பீடு (ரூ.1000 முன்பணம் செலுத்த வேண்டும்)
- ரெட்பஸ் சேவையில் முதல் பயணம் செய்வோருக்கு 20% தள்ளுபடி