புதிய கேஜெட்டுகள்

குறைந்த விலையில் ஓபன்-இயர் இயர்பட்ஸ்... சம்பவம் செய்த போட்

இந்த மாடல் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

boAt Airdopes ProClip open-ear earbuds launched

போட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஏர்டோப்ஸ் ப்ரோ க்ளிப் மாசலை அறிமுகம் செய்தது. புதிய ஓபன்-இயர் இயரபட்ஸ் விலை ர. 1,599 என நிர்ணயிக்கப்பட்டுது. வெளிப்புறத்தில் நடக்கும் விஷயங்களை கேட்டுக் கொண்டே இசையை அனுபவிக்க செய்யும் வகையில் புதிய இயர்பட்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய இயர்பட்ஸ் குறைந்த விலையில் தரமான அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடல் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

அம்சங்கள்:

இந்த இயர்பட்ஸ் ஆடியோ இழப்பை தவிர்க்க சோனிக் சீல் தொழில்நுட்பம் கொண்டிருப்பதாக போட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இயர்பட்ஸ்-இல் 12mm டிரைவர்கள் உள்ளன. இதன் கேஸ்-இல் 500mAh பேட்டரி உள்ளது. இந்த இயர்பட்ஸ் மொத்தத்தில் 52 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் என்று போட் தெரிவித்துள்ளது.

உடற்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி செய்யும் போதும் இந்த இயர்பட்ஸ் பயன்படுத்த ஏதுவாக ஏர்டோப்ஸ் IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன்வருகிறது. சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் இந்த இயர்பட்ஸ் சவுகரியம், சிறப்பான பயன்பாடு என பலவிதங்களில் பயனர் தேவையை கச்சிதமாக பூர்த்தி செய்யும் என்று தெரிகிறது.

விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் போட் ஏர்டோப்ஸ் ப்ரோ க்ளிப் விலை ரூ. 1,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் வெல்வெட் வைட், சில்க் கிரே மற்றும் சேட்டின் வைட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை போட் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெறுகிறது.