விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. விவோ பட்ஸ் என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் தினமும் இயர்பட்ஸ் பயன்படுத்துவோரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தலைசிறந்த ஆடியோ, நீண்ட நேர பேட்டரி, அழைப்புகள் மற்றும் கனெக்டிவிட்டி ஆகியவற்றை சிறப்பான டிசைனில் விவோ பட்ஸ் ஒருசேர வழங்குகிறது. நீண்டநேர பயன்பாடுகளின் போதும் அசௌகரியம் ஏற்படாத வகையில், இந்த இயர்பட்ஸ் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய விவோ பட்ஸ் 10 மில்லிமீட்டர் அதிக ரெசல்யூஷன் ஸ்பீக்கர் டிரைவர் கொண்டிருக்கிறது. இகு அழைப்புகளின் போது குரல் தெளிவாக கேட்பதை உறுதி செய்கிறது. இத்துடன் பயனர்கள் சவுண்ட்-ஐ 10-பேன்ட் EQ கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்களுடன் பயன்படுத்தும் போது இந்த இயர்பட்ஸ் ஸ்பேஷியல் ஆடியோ வசதியை ஆதரிக்கிறது.
இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 12 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது அதிகபட்சம் 50 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 4 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
இத்துடன் டூயல் மைக் ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் அழைப்புகளின் போது வெளிப்புற சத்தங்களை தடுத்து நிறுத்தும், இதனால் குரல் அதிக தெளிவாக கேட்கும்.
புதிய விவோ பட்ஸ் மாடலின் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறைந்த செலவில் புது இயர்பட்ஸ் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு ஏற்ற மாடலாக அமைந்துள்ளது. இந்த இயர்பட்ஸ் நீலகிரி கிரீன் மற்றும் பசால்ட் பிளாக் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.