புதிய கேஜெட்டுகள்

ரூ. 10,000 பட்ஜெட்டில் புது IER ஹெட்போன்அறிமுகம் செய்த சோனி - என்ன ஸ்பெஷல்?

இந்த இயர்போன் மொத்தத்தில் மூன்றுவித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

சோனி நிறுவனம் இந்திய சந்தையில் IER-M500 பெயரில் புதிய இன்-இயர் மாணிட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் தொழில்முறை ஆடியோ மாணிட்டரிங் மற்றும் லைவ் பெர்ஃபார்மன்ஸ் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இயர்போன்கள் 5mm டைனமிக் டிரைவர்கள், சீல்டு அகௌஸ்டிக் டிசைன் கொண்டுள்ளன. இது பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷன் வசதியை வழங்குகிறது. இத்துடன் பல்வேறு இயர் டிப்கள், ஃபிட்டிங் சப்போர்ட்ர்ஸ், கேபிள் க்ளிப் மற்றும் கேஸ் உள்ளிட்டவை இந்த இயர்போனுடன் வழங்கப்படுகிறது.

புதிய சோனி IER-M500 மாடல் கடந்த ஜூலை மாத வாக்கில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வந்தள்ளது. இந்த இயர்போன் மொத்தத்தில் மூன்றுவித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

சிறப்பு அம்சங்கள்:

சோனி IER-M500 5mm டிரைவர்களை கொண்டிருக்கிறது. இந்த இயர்போன்கள் சீல்டு ஹவுசிங், இன்டர்னல் அகௌஸ்டிக் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இது வெளிப்புற சத்தத்தை குறைக்க செய்கிறது. இத்துடன் நாய்ஸ்-ஐசோலேட்டிங் இயர் டிப்கள் வழங்கப்படுகிறது. இது பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷன் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

கனெக்டிவிட்டிக்கு சோனி IER-M500 மாடலிில் 1.6m வயர்டு Y-டைப் கேபிள் மற்றும் L-வடிவ ஸ்டீரியோ மினி பிளக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போனுடன் ஃபிட்டிங் சப்போர்ட்டர்ஸ், பலவித அளவுகளல் நாய்ஸ்-ஐசோலேட்டிங் இயர் டிப்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கேபிள் க்ளிப் வழங்கப்படுகிறது. கேபிள் தவிர்த்து இந்த இயர்போனின் எடை 6.9 கிராம் ஆகும்.

விலை மற்றும் விவரங்கள்:

இந்திய சந்தையில் சோனி IER-M500 மாடலின் விலை ரூ. 10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்போன் பிளாக், க்ளியர் மற்றும் ரெட் அண்ட் பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த இயர்போன் அமேசான், ப்ளிப்கார்ட், ரியல் இமேஜ், சவுண்ட் க்ளிட்ஸ், ஹெட்போன் ஜோன் மற்றும் இதர ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.