சாம்சங் நிறுவனம் இந்தய சந்தையில் தனது பிரீமியம் ஆடியோ சாதனங்களை விரிவுப்படுத்தியது.
அதன்படி சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மியூசிக் ஸ்டூடியோ சீரிஸ் ஸ்பீக்கர் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தனித்துவ ஸ்பீக்கர்:
புதிய ஸ்பீக்கர்கள் மியூசிக் ஸ்டூடியோ 5 மற்றும் மியூசிக் ஸ்டூடியோ 7 என அழைக்கப்படுகின்றன. இரு வைபை மாடல்களும் தனித்துவ ஸ்பீக்கர்களாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சீரிஸ் ஸ்பீக்கர்கள் சாம்சங் நிறுவனத்தின் வரிவான ஆடியோ அமைப்பு மற்றும் இணக்கமான டிவி மற்றும் சவுண்ட் பார்களுடன் இணைந்து இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஹோம் ஆடியோ:
வயர்லெஸ் கனெக்டிவிட்டி, சீரான ஆடியோ மற்றும் ஸ்மார்ட் ஹோம் இன்டகிரேஷன் வழங்க புது ஸ்பீக்கர்கள் கவனம் செலுத்துகின்றன. இந்த வசதிகள் புது ஸ்பீக்கர்களை சோனோஸ், போஸ் மற்றும் மார்ஷல் போன்ற பிரான்டுகளுடன் போட்டியிட வைக்கின்றன.
மற்ற ப்ளூடூத் ஸ்பீக்கர்களை போன்று இல்லாமல், சாம்சங் தனது மியூசிக் ஸ்டூடியோ மாடல்களை ஹோம் ஆடியோ சொல்யூஷனாக நிலைநிறுத்துகிறது.
இரு மாடல்கள்:
மியூசிக் ஸ்டூடியோ சீரிசில் மியூசிக் ஸ்டூடியோ 5 (LS50H) மற்றும் மியூசிக் ஸ்டூடியோ 7 (LS70H) என இரு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இரு மாடல்களும் பிரெஞ்சு டிசைனர் எர்வன் பௌரௌலெக் உருவாக்கிய மியூசிக் மற்றும் கலை சார்ந்த சர்வதேச சின்னங்களை சார்ந்து "டாட்" டிசைன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
மியூசிக் ஸ்டூடியோ 7 சற்றே பிரீமியம் மாடல் ஆகும், இதில் 3.1.1 சேனல் ஸ்பீக்கர் செட்டப் உள்ளது. இந்த மாடலை தனியாகவோ அல்லது இணக்கமான சாம்சங் ஸ்பீக்கர்கள் அல்லது டிவிக்களுடன் பெரிய சரவுண்ட் சவுண்ட் செட்டப் உருவாக்கவும் முடியும்.
சாம்சங் மியூசிக் ஸ்டூடியோ சீரிஸ் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள், முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ. 27,900 என தொடங்குகிறது.