ரெட்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய டர்போ 5 ஸ்மார்ட்போன் அறிமுக சலுகைளுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் முதல் டர்போ சீரிஸ் ஸ்மார்ட்போனாக ரெட்மி டர்போ 5 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் சின்க் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் டால்பி விஷன் சப்போர்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட், ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர்ஓஎஸ் 3 வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 20MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் 7540mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 100 வாட் ஹைப்பர்சார்ஜ், 27 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 7, ப்ளூடூத் 6 மற்றும் ஐஆர் பிளாஸ்டர் வழங்கப்படுகிறது. இந்த ஸமார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ, பாதுகாப்பிற்கு கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37,999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 40,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சம் ரூ. 2000 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.