புதிய கேஜெட்டுகள்

10,000mAh பேட்டரி, 100W சார்ஜிங் வசதியுடன் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓ.எஸ். 3 உடன் வருகிறது.

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தேர்வு செய்யப்பட்ட சர்வதேச சந்தைகளில் தனது ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

இந்த ஸ்மார்ட்போன் அளவில் பெரிய பேட்டரி, அதிவேக சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்களுடன் வருகிறது.

புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்கள் மற்றும் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்:

சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.83 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், HDR10+ மற்றும் டால்பி விஷன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கிரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 மூலம் பாதுகாக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 பிராசஸர், அதிகபட்சம் 8ஜிபி LPDDR5X ரேம், 512ஜிபி UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. மென்பொருளை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓ.எஸ். 3 உடன் வருகிறது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்து பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் சிம், வைபை 6, ப்ளூடூத் 6 வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 100 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 27 வாட் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

விலை விவரங்கள்:

புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல் விலை JPY79,980 இந்திய மதிப்பில் ரூ. 47,900 என்றும் 8ஜிபி ரேம், 512ஜிபி மெமரி மாடல் விலை JPY99,980 இந்திய மதிப்பில் ரூ. 59,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிளவுட் பிரஷ், பர்ப்பிள் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.