புதிய கேஜெட்டுகள்

7900mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் புது போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

புதிய போக்கோ ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

போக்கோ பிரான்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது M8x 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் மூலம் போக்கோ மிட்-ரேஞ்ச் பிரிவில் தனது சாதனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.

புதிய ஸ்மார்ட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப், பிரத்யேக தெர்மல் மேனேஜ்மென்ட், சிலிகான் மற்றும் நீடித்த மென்பொருள் சப்போர்ட் கொண்டுள்ளது.

புதிய போக்கோ M8x குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த பிராசஸர் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் LPDDR4X ரக ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் உட் வருகிறது.

போக்கோ M8x 5ஜி அம்சங்கள்:

சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ M8x ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் 720x1600 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 பிராசஸர், அட்ரினோ 613 GPU, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓ.எஸ். 3 கொண்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஃப்ளிக்கர் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், 8MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 7900mAh பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் கொண்டுள்ளது.

விலை விவரங்கள்:

போக்கோ M8x 5ஜி ஸ்மார்ட்போன் க்ரீன் மற்றும் வீகன் லெதர் பேக், கோபால்ட் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20,999 என்று் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 27-ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் தொடங்குகிறது.