புதிய கேஜெட்டுகள்

ஐபோன் டுயோவிற்கு போட்டியாக விரைவில் வெளியாகும் மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

புதிய மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டூயல் 50MP கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என தகவல்.

மோட்டோரோலா இந்த ஆண்டிற்கான தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான மோட்டோ Razr Flex (ரேஸர் ஃபிளெக்ஸ்) மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோன் டுயோ மற்றும் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 8 ஆகியவற்றுடன் போட்டியிடும்.

இது கச்சிதமான, பாஸ்போர்ட் பாணி வடிவமைப்பையும், உயர்தர 2025 குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கொண்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் சிப்செட்டை பயன்படுத்தினாலும், இந்தியாவில், ஆப்பிள் ஐபோன் டுயோவின் முதன்மை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்ய மோட்டோரோலா இதை பயன்படுத்தக்கூடும்.

குறைவான விலையில் கிடைக்கலாம்:

இந்தியாவில் டுயோவின் ஆரம்ப விலை ரூ. 299900 ஆகும். இது ரூ. 1,74,999-இல் தொடங்கும் சாம்சங்கின் கேலக்ஸி Z ஃபோல்ட் 8-ஐ விட குறைவான விலையில் கிடைக்கலாம். அந்த வகையில் பயனர்கள் இந்த ஆண்டு புதிய சிறிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுக்கு மேம்படுத்த விரும்பினால், ஆப்பிள் மற்றும் சாம்சங் தவிர, மோட்டோரோலாவின் ரேஸர் ஃபிளெக்ஸ் மாடலையும் பரிசீலிக்கலாம்.

மோட்டோரோலா இன்னும் ரேஸர் ஃபிளெக்ஸ் மாடலுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை, ஆனால் சமீபத்திய கீக்பெஞ்ச் 6 பட்டியல் மற்றும் வதந்திகள், அது விரைவில் சர்வதேச வெளியீட்டிற்கு தயாராகி வருவதை காட்டுகின்றன.

எதிர்பார்க்கப்படும் சிறப்பு அம்சங்கள்:

மோட்டோரோலா ரேஸர் ஃபிளெக்ஸ் மாடலில் 3nm செயல்முறையில் உருவாக்கப்பட்ட, 2025-ஆம் ஆண்டின் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸரை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் 12ஜிபி வரையிலான ரேம் உடன் வரும் என்று தெரிகிறது.

மேலும், இந்த புதிய பாஸ்போர்ட்-பாணியிலான மோட்டோரோலா மடிக்கக்கூடிய சாதனம், மோட்டோ ரேஸர் ஃபிளெக்ஸ் 27 என்று அழைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மோட்டோரோலா மடிக்கக்கூடிய ரேஸர் ஃபிளெக்ஸ் மாடலில், வெளிப்புறத்தில் டால்பி விஷன் மற்றும் HDR10+ ஆதரவுடன் கூடிய 4.97-இன்ச் OLED பேனல் இடம்பெறும். உள்புறத்திலும், அதே டால்பி விஷன் மற்றும் HDR10+ ஆதரவுடன் கூடிய, மடக்கக்கூடிய 6.92-இன்ச் OLED பேனல் இடம்பெற்றிருக்கும்.

கேமராவைப் பொறுத்தவரை, 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமராவும், கூடுதலாக 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. பேட்டரி மற்றும் சார்ஜிங்கைப் பொறுத்தவரை, 5000mAh டூயல்-செல் பேட்டரி இடம்பெறும் என்றும், இதில் ஒவ்வொரு பேனலிலும் 2500mAh திறன் கொண்ட செல் இருக்கும். மேலும், இது 24W Qi2 வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்துடன் வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 6 கனெக்டிவிட்டி, IP48 மற்றும் IP49 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 17 சார்ந்த புதிய AI அம்சங்களை கொண்ட ஹெல்லோ யுஐ (HelloUI) என்ற புதிய மோட்டோ OS-ஐ நாம் பெறவுள்ளோம்.

SCROLL FOR NEXT