ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனின் அடுத்த பதிப்பில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஆரம்பகட்ட முன்மாதிரிகள், நிறுவனம் தனது வன்பொருளில் மாற்றங்களை ஆராய்ந்து வருவதைக் காட்டுகின்றன. ஐபோன் டுயோ இந்தியாவில் வாடிக்கையாளர்களை சென்றடைய தொடங்கியுள்ள நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
புதிய ஆன்லைன் அறிக்கைகளின்படி, குபெர்டினோவைத் தளமாகக் கொண்ட இந்த தொழில்நுட்ப நிறுவனம், அதன் அடுத்த பதிப்பை ஏற்கனவே உள்நாட்டில் சோதித்து வருகிறது. இருப்பினும், எந்தெந்த மாற்றங்கள் இறுதி சாதனத்தில் இடம்பெறும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. நிறுவனம் தனது அடுத்த மடிக்கக்கூடிய ஐபோன் மாடலுக்கான திட்டங்களை இன்னும் அறிவிக்கவில்லை.
ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் தனது 'பவர் ஆன்' பாட்காஸ்டில் இந்த சாதனம் குறித்து விவாதித்தபோது, ஆப்பிள் நிறுவனம் வெளிப்புறத் திரையில் ஃபேஸ் ஐடியை இணைத்து ஐபோன் டுயோ 2 ப்ரோடோடைப்களை ஏற்கனவே டெஸ்டிங் செய்து வருவதாக கூறினார். இது தற்போதைய மாடலின் பக்கவாட்டு பொத்தானில் உள்ள டச் ஐடி சென்சாருக்கு பதிலாக, பயனர்களுக்கு முகத்தை அடையாளம் காணும் வசதியை வழங்கும்.
இருப்பினும், இவ்வளவு மெல்லிய சாதனத்தில் ஃபேஸ் ஐடியை செயல்பட வைப்பது சவாலானதாக இருக்கலாம், ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் டாட் ப்ரொஜெக்டர் மற்றும் இன்ஃப்ராரெட் கேமரா போன்ற பாகங்களை சிறியதாக மாற்ற வேண்டியிருக்கும்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆக்சன் பட்டனையும் அடுத்த மடிக்கக்கூடிய சாதனத்தில் கொண்டு வரக்கூடும். நிறுவனத்தின் ப்ரோ மாடல்களில் கிடைக்கும், பிரத்யேக பட்டன், கேமராவை திறப்பது அல்லது ஃபிளாஷ்லைட்டை இயக்குவது போன்ற அன்றாட பணிகளுக்கான ஷாட்கட்களை அமைக்க பயனர்களை அனுமதிக்கிறது. தற்போதைய ஐபோன் டுயோவில் இந்த அம்சம் இல்லை.
எதிர்கால ஐபோன் டுயோவில் டெலிஃபோட்டோ கேமராவை சேர்க்க ஆப்பிள் பரிசீலித்து வருவதாக குர்மன் கூறினார், இருப்பினும் அது எப்போது நடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. தற்போதைய மாடலில், பிரதான மற்றும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராக்களுடன் கூடிய 48MP டூயல் ஃபியூஷன் பின்புற கேமரா அமைப்பு உள்ளது.
ஆப்பிள் அடுத்த தலைமுறைக்காக ஒரு பெரிய உள் திரையையும் பரிசீலித்து வரலாம். தற்போதைய ஐபோன் டுயோவில் 7.6-இன்ச் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் உள்ளது, ஆனால் எதிர்கால மாடல்களில் 8.5 முதல் 9 இன்ச் இடைப்பட்ட அளவிலான பேனல்கள் இடம்பெறலாம். இந்த மாற்றங்கள் அனைத்தும் ஐபோன் டு யோ 2 உடன் வராமல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறைகளில் பரவலாக இருக்கலாம் என்று குர்மன் குறிப்பிட்டார்.
இந்த விவரங்கள் எதையும் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், எனவே அவற்றை பற்றிய உறுதியான விவரங்கள் தெரியவரும் வரை, கூறப்படும் மேம்பாடுகளை யூகங்களாகவே கருத வேண்டும்.