ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயர்பட்ஸ் ஐகூ Z11 ஸ்மாரட்போனுடன் அறிமுகமானது.
புதிய இயர்பட்ஸ் பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த மாடல் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
புதிய ஐகூ இயர்பட்ஸ் சிலிகான் டிப்களுடன் கிடைக்கிறது. இத்துடன் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடல் ஒற்றை நிறத்தில் மட்டுமே அறிமுகமாகி இருக்கிறது.
ஐகூ பட்ஸ் இன்-இயர் ஸ்டைல் மாடல் ஆகும். இதில் 10 மில்லிமீட்டர் அளவில் கால் டிரைவ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இயர்பட்ஸ் AAC மற்றும் SBC கோடெக் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் டீப்-எக்ஸ் 4.0 சவுண்ட் எஃபெக்ட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ அம்சங்களுடன் வருகிறது. இத்துடன் டூயல் மைக்ரோபோன் யூனிட், ஏ.ஐ. கால் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு ஐகூ பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 6.1, டூயல் சேனல் டிரான்ஸ்மிஷன் 2.0, 10-மீட்டர்கள் வரை ஓபன்-ஏரியா கனெக்ஷன் ரேஞ்ச், 42ms கேமிங் லேடென்சி கொண்டிருக்கிறது. இத்துடன் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டும் குயிக் பேரிங் வசதி கொண்டுள்ளது. இந்த மாடல் டபுள்-டேப், ட்ரிபில் டேப மற்றும் டச் அண்ட் ஹோல்டு ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல்களுடன் வருகிறது.
ஐகூ பட்ஸ்-இன் இயர்பட்ஸ் ஒவ்வொன்றிலும் 53mAh பேட்டரி, சார்ஜிங் கேசில் 525mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்படஸ் மொத்தத்தில் 50 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்று ஐகூ தெரிவித்துள்ளது. இதன் இயர்போன்கள் அதிகபட்சம் 12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த இயர்பட்ஸ்-ஐ 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.
புதிய ஐகூ பட்ஸ் விலை ரூ. 1,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் வாங்குவோர் எந்த வங்கி கார்டுகளை பயன்படுத்தினாலும் ரூ. 200 உடனடி கேஷ்பேக் பெற முடியும்.
இதனால், இந்த இயர்பட்ஸ்-ஐ பயனர்கள் ரூ. 1,699 விலையிலேயே வாங்கிட முடியும்.
இந்த இயர்பட்ஸ் ஃபிளேம் எல்லை என ஒற்றை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் 24-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசன் வலைதளத்தில் தொடங்குகிறது.