புதிய கேஜெட்டுகள்

விரைவில் வெளியீடு - ஒரே நாளில் ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் அறிமுகம் செய்யும் ஐகூ

புதிய ஐகூ ஸ்மார்ட்போன் 7050mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்று கூறப்படுகிறது.

விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான ஐகூ (iQOO) விரைவில் இந்தியாவில் புதிய ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இவை ஐகூ பட்ஸ் என்று அழைக்கப்படும், மேலும் தற்போது இந்தியாவிற்கான இதன் வெளியீட்டுத் தேதியை அந்த பிராண்ட் உறுதி செய்துள்ளது.

புதிய இயர்பட்ஸ் மாடலுடன் ஐகூ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z11 5ஜி என அழைக்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மற்றும் இயர்போன் என இரண்டு சாதனங்களும் ஒரே நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

வெளியீட்டு தேதி:

புதிய ஐகூ பட்ஸ், 2026 ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இத்துடன் ஐகூ Z11 5ஜி உடன் சேர்ந்து நடைபெறும். ஐகூ Z11 வடிவமைப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

இது சந்தையில் உள்ள மற்ற இயர்போன்களை போல தோற்றமளிக்கிறது. ஐகூ பட்ஸ், அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டீசரில், இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் இருப்பதை காணலாம்.

ஐகூ பட்ஸ், காதுக்குள் பொருந்தும் வடிவமைப்பை கொண்டிருக்கும், மேலும் அதன் சார்ஜிங் கேஸின் அடிப்பகுதியில் ஒரு எல்.இ.டி. இண்டிகேட்டர் உள்ளது. புதிய ஐகூ Z11 ஸ்மார்ட்போன் தற்போது இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

அம்சங்கள்:

புதிய ஐகூ Z11 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7500 SoC வழங்கப்படுகிறது. மேலும் இதில் AI சார்ந்த பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 1.5K ரெசல்யூஷனுடன் 6.8-இன்ச் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000nits பிரைட்னஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 7050mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 40,000-க்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது அரோரா கிரீன் மற்றும் செலஸ்டியல் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.