ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஹோம்வியூ ஸ்மார்ட் டிஸ்ப்ளேவுடன், அடுத்த தலைமுறை ஹோம்பாட் மினி (HomePod Mini) மற்றும் புதிய ஆப்பிள் டிவி 4K (Apple TV 4K) ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இந்த இரண்டு சாதனங்களும், மேம்படுத்தப்பட்ட ஆடியோ மற்றும் ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோல்கள் உட்பட, ஆப்பிளின் கனெக்டெட் ஹோம் அனுபவத்திற்கு மேம்பாடுகளைக் கொண்டு வருகின்றன.
புதிய ஹோம்பாட் மினி 2 புதிய வண்ணங்கள், 360-டிகிரி ஆடியோ, சவுண்ட் க்ளோ (Sound Glow) லைட்டிங் எஃபெக்ட்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோல்களை பெறுகிறது. மேலும், எதிர்கால அப்டேட் மூலம் ஏஐ சப்போர்ட் வழங்கப்பட இருக்கிறது.
புதிய ஆப்பிள் டிவி 4K மாடலில் A19 சிப், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் உள்ளடக்கங்களைக் கண்டறிவதற்கான உரையாடல் பாணியிலான சிரி அனுபவம் பெறுகிறது.
புதிய தலைமுறை ஹோம்பாட் மினி, ஆப்பிளின் S10 சிப் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் அதன் கச்சிதமான வடிவமைப்பில் இருந்து 360-டிகிரி ஆடியோவை வழங்கும் என உறுதியளிக்கிறது. பயனர்கள் ஒரு ஸ்பீக்கர் மூலம் இசையை இயக்கலாம், ஸ்டீரியோ ஒலிக்கு இரண்டு ஸ்பீக்கர்களை இணைக்கலாம் அல்லது மல்டி-ரூம் ஆடியோவிற்காக பல ஸ்பீக்கர்களை இணைக்கலாம்.
புதிய ஆப்பிள் டிவி 4K உடன் இணைக்கப்படும்போது, ஹோம்பாட் மினி 2 ஆனது நான்கு ஸ்பீக்கர் சரவுண்ட்-சவுண்ட் அமைப்பின் ஒரு பகுதியாகவும் இருக்க முடியும். இந்த ஸ்பீக்கர், ஒரு வீட்டில் உள்ள ஆறு பேர் வரை குரல் மூலம் அடையாளம் கண்டு, அதற்கேற்ப இசை மற்றும் பிற செயல்பாடுகளை தனிப்பயனாக்கும்.
ஆப்பிள் நிறுவனம் 'சவுண்ட் க்ளோ' (Sound Glow) என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பேஸ் மற்றும் ட்ரெபிள் ஒலிகளுக்கு ஏற்ப, ஸ்பீக்கரின் மேற்பகுதியை ஒளிர செய்து, இசைக்கு ஏற்றவாறு துடிக்க வைக்கும்.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஹோம்பாட் மினி 2 மாடலின் விலையை ரூ. 18,900 என நிர்ணயம் செய்துள்ளது. முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன, அக்டோபர் 30 முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரை பிங்க், கிரீன், புளூ, வைட் மற்றும் மிட்நைட் ஆகிய ஐந்து வண்ணங்களில் தேர்வு செய்யலாம்.
புதிய தலைமுறை ஆப்பிள் டிவி 4K மாடல் A19 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் வரை வேகமான CPU செயல்திறனையும், இரண்டு மடங்கு GPU செயல்திறனையும் வழங்குவதாக ஆப்பிள் கூறுகிறது. மேலும், இது மிகவும் திறமையான ஸ்ட்ரீமிங்கிற்காக ஒரு பிரத்யேக AV1 டிகோடரையும் கொண்டுள்ளது.
இந்த சாதனத்தில் மூன்று தொலைதூர மைக்ரோஃபோன்கள் உள்ளன. இதன் மூலம் பயனர்கள் சிரி ரிமோட்டை பிடிக்க தேவையின்றி, வாய்ஸ் கண்ட்ரோல் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை இயக்கவும் தேடவும் முடியும். சிரி ஏஐ, உள்ளடக்கங்களைக் கண்டறிவதற்கான ஃபுல் ஸ்கிரீன் இன்டர்ஃபேஸ் வழங்குகிறது.
மேம்படுத்தப்பட்ட சிரி ரிமோட், துல்லியமாக கண்டறியும் வசதியுடன் 'Find My' ஆதரவையும், பயனர்கள் அதன் இருப்பிடத்தை கண்டறிய உதவும் வகையில் ஒலி எழுப்பும் ஆப்ஷனையும் சேர்க்கிறது. ஆப்பிள் டிவி 4K ஒரு ஸ்மார்ட் ஹோம் ஹப்-ஆகவும் செயல்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் டிவி 4K (நான்காம் தலைமுறை) சாதனத்தின் விலையை இந்தியாவில் ரூ. 39,900 என நிர்ணயம் செய்துள்ளது. இந்த சாதனத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில், நவம்பர் 13-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.