கூகுள் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதியன்று 'மேட் பை கூகுள்' நிகழ்ச்சி நடைபெறும் என்பதை உறுதி செய்துள்ளது.
இந்நிகழ்வில், பிக்சல் 11 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் 5 ஆகியவற்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் பட்ஸ் ப்ரோ 3-ஐ எதிர்பார்க்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்நிகழ்வு நியூயார்க் நகரில் நடைபெறும்.
கேமரா பம்ப்:
புதிய பிக்சல் 11 சீரிஸ் டீசரில் கேமரா பம்ப் காட்டப்பட்டுள்ளது. முன்னதாக போனின் CAD அடிப்படையிலான ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகின.
மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கான ரெண்டர்கள் வெளியீட்டிற்கு முன்பே கிடைக்கும். நிறுவனம் வழக்கமாக வெளியீட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு போனின் வடிவமைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
மெமரி வேரியண்ட்:
சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, பிக்சல் 11 சீரிசில் 128GB வெர்ஷன் முற்றிலுமாக நீக்கப்பட்டு, அனைத்து மாடல்களும் 256GB-இல் இருந்து தொடங்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும், ப்ரோ, ப்ரோ எக்ஸ்எல் மற்றும் ப்ரோ ஃபோல்ட் மாடல்களில் 1TB எடிஷனும் வழங்கப்படும்.
வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, சாதாரண பிக்சல் 11 கிரே, பிளாக், பின்க் மற்றும் கிரீன் ஆகிய நான்கு வண்ணங்களிலும்; பிக்சல் 11 ப்ரோ மற்றும் ப்ரோ எக்ஸ்எல் வைட், பிளாக், பின்க் மற்றும் கிரீன் ஆகிய நான்கு வண்ணங்களிலும்; மற்றும் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் கருப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு வண்ணங்களிலும் கிடைக்கும்.