புதிய கேஜெட்டுகள்

‘கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்’ உலக சந்தையில் விற்பனை

கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள் ஜேட், பெர்ரி, போர்சிலின் மற்றும் ஹேசல் ஆகிய நான்கு வண்ணங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

கூகுள் ஹோம் ஸ்பீக்கர்:

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம், ‘கூகுள் ஹோம் ஸ்பீக்கர்’ கேட்ஜெட்டை உலக சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக அறிவித்தது.

இந்த வகை ஸ்மார்ட் ஸ்பிக்கர் 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி சேமிப்பு வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 360 டிகிரியில் அனைத்து திசைகளிலும் ஒலி பரப்பக்கூடிய வகையில் 58 மி.மீ டிரைவரைக் கொண்டுள்ளது.

பழைய கூகுள் அசிஸ்டன்ட்-டின் மேம்படுத்தப்பட்ட ‘ஜெமினி ஏஐ’ தொழில்நுட்ப அம்சத்துடன் சந்தைக்கு வர உள்ளது. வைஃபை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 வசதியுடன் வடிமைக்கபட்டு உள்ளது.

இந்த வகை கூகுள் ஸ்பீக்கரில், ஸ்பேஷியல் சரவுண்ட் சவுண்ட் வசதியை பெறுவதற்கு வைஃபை நெட்வொர்க் வழியாக கூகுள் டிவி ஸ்ட்ரீமரை இணைக்க வேண்டும். இதில் பத்து புதிய இயல்பான குரல்கள் இடம்பெற்றுள்ளன.

கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள் ஜேட், பெர்ரி, போர்சிலின் மற்றும் ஹேசல் ஆகிய நான்கு வண்ணங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

ஜேட் மற்றும் பெர்ரி ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வரும் ஸ்பீக்கர்கள், அமெரிக்காவில் மட்டுமே பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள புதிய வகை கூகுள் ஹோம் ஸ்பீக்கர் ஜூன் 25 அன்று சுமார் 9,500 ரூபாய் விலையில் விற்பனைக்கு வர உள்ளது.