புதிய கேஜெட்டுகள்

80வாட் அவுட்புட், சவுண்ட் சும்மா பிச்சிக்கும்... போட் ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்

புதிய போட் ப்ளூடூத் ஸ்பீக்கர் இருவித நிறங்களில் கிடைக்கிறது.

போட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் போட் ஸ்டோன் 900 என அழைக்கப்படுகிறது. இந்த மாடல் இருவித நிறங்களில் வருகிறது. இதில் டூயல் டிரைவர் செட்டப் மற்றும் அதிகபட்சம் 80 வாட் சவுண்ட் அவுட்புட் வழங்கும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கரில் பிரத்யேக டுவீட்டர்கள் உள்ளன.

அம்சங்கள்:

இத்துடன் ஆர்.ஜி.பி. லைட்டிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்டோன் 900 மாடல் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் கிடைக்கிறது. இத்துடன் பிரத்யேக ட்ரூ வயர்லெ்ஸ் சவுண்ட் மோட், பில்ட்-இன் மைக்ரோபோன் போன்ற வசதிகள் உள்ளன.

மேலும், வாய்ஸ் அசிஸ்டண்ட், அதிகபட்சம் 15 மணி நேர மியூசிக் பிளேபேக், ப்ளூடூத் 5.3, AUX மற்றும் யுஎஸ்பி பிளேபேக் வழங்குகிறது. அளவீடுகளை பொருத்தவரை இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் 372x152x201mm-இல் உள்ளது.

விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் புதிய போட் ஸ்டோன் 900 மாடலின் விலை ரூ. 5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் அமேசான் வலைதளத்தில் நடைபெறும் அமேசான் பிரைம் டே சேல் 2026-இல் ரூ. 4,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி இந்த மாடல் ரூ. 1000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

அமேசான் தவிர புதிய போட் ஸ்டோன் 900 மாடல் போட் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் வலைதளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. போட் ஸ்டோன் 900 ப்ளூடூத் ஸ்பீக்கர் கிராஃபைட் பிளாக் மற்றும் ஜங்கிள் டெரைன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.